செம்மறியாடு வளர்ப்பு:
செம்மறியாடு பல வித உபயோகமுள்ள நூல், இறைச்சி, பால், தோல் மற்றும் உரம் ஆகிய பயன்களை தரக்கூடியது. இது வறண்ட மற்றும் பகுதி வறண்ட மற்றும் மலைப் பகுதிகளில் ஊரக பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியமான பகுதியாக உள்ளது. ஆட்டிலிருந்து கிடைக்கும் உல்லன் நூல் மற்றும் ஆடுகளை விற்பதால் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாக வெள்ளாடு வளர்ப்பு விளங்குகிறது. இதனுடைய பயன்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
- செம்மறியாடுகளுக்கு என்று தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் கூடாரம் அமைக்க வேண்டியதில்லை. குறைந்த அளவு ஆட்களே பராமரிக்க போதுமானது.
- அடிப்படை பண்ணை அமைப்பது மிகவும் செலவு குறைந்தது. அதிலிருந்து வெள்ளாடு கூட்டத்தை விரைவில் அதிகப்படுத்தலாம்.
- செம்மறியாடு புல்லைத் தின்று நமக்கு இறைச்சியையும், உல்லன் நூலையும் தருகிறது.
- இலை பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன இவை களைகளை பெருமளவில் அழிக்கின்றன.
- வெள்ளாடுகள் போல் அல்லாமல், செம்மறியாடுகள் மரத்தை அதிகளவில் சேதப்படுத்தும்.
- ஆடு வளர்ப்பவர்களுக்கு, உல்லன் நூல், இறைச்சி மற்றும் உரம் ஆகிய மூன்று வகைகளில் வருமானத்தைத் தருகிறது.
- இதனுடைய உதட்டு அமைப்பின் உதவியினால் அறுவடை நேரத்தில் தானியங்களை சுத்தம் செய்ய முடியும். வீணாகப்போகும் தானியத்தை நல்ல பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும்.
- மட்டன் என்பது ஒரு வகை இறைச்சியாக இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அதிகளவில் மட்டன் உற்பத்தி செய்யும் இனங்களை பெருக்க வேண்டும்.
1997 ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின் படி, நம் நாட்டில் 56.8 மில்லியன் செம்மறியாடுகள் உள்ளன, மற்றும்உலகளவில் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2001 -02 ஆம் ஆண்டிலிருந்து உல்லன் நூல் உற்பத்தி 50.709 மில்லியன் அளவும், தோலுடன் கூடிய உல்லன் நூல் 524 மில்லியன் டன்னும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் இறைச்சி 700500 மி. டன்னும். புத்தம்புது செம்மறியாடுகள் 52800 மி. டன்னும் இருந்தது. 1994-95 ம் ஆண்டிலிருந்து உல்லன் நூலின் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம் 25773 மில்லியன் ரூபாயக இருக்கிறது. செம்மறியாட்டிலிருந்து இறைச்சி உற்பத்தி 14 சதவீதம் உள்ளது. செம்மறியாட்டிலிருந்து இறைச்சி ஏற்றுமதி 8 சதவீதமாக வேளாண் பொருட்களின் மொத்த ஏற்றுமதியில் இருக்கிறது. உயிருடன் உள்ள செம்மறியாடும் இறைச்சி பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. செம்மறியாட்டின் தோலானது தோல் மற்றும் தோல் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சமூகத்தின் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கு செம்மறியாடு வளர்ப்பு நல்ல வருமானத்தை தருகிறது. செம்மறியாடு வளர்ப்பை மேம்படுத்தும் திட்டங்களாவன: வறட்சி மேம்பாட்டு திட்டம், குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள். தீவிர செம்மறியாடு மேம்பாட்டுத் திட்டம் செம்மறியாடு வளர்க்கும் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உல்லன் நூல் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் உல்லன் நூல் வாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், மற்றும் கர்நாடகா மாவட்டங்களில் இந்த வாரியம் முன்பே அமைக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் உல்லன் நூல் மேம்பாட்டு நிறுவனங்கள் /கூட்டமைப்புகள் உள்ளன.
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக உள்ள செம்மறியாடுகளின் எண்ணிக்கை – 1997
வ.எண் |
மாநிலம் / யூனியன் பிரதேசம் |
மொத்தம் |
1. |
ஆந்திரப் பிரதேசம் |
9743 |
2. |
அருணாச்சலப் பிரதேசம் |
27 |
3. |
அஸ்ஸாம் |
84 |
4. |
பீகார் |
1956 |
5. |
சட்டீஸ்கர் |
196 |
6. |
கோவா |
0 |
7. |
குஜராத் |
2158 |
8. |
ஹரியானா |
1275 |
9. |
ஹிமாச்சலப் பிரதேசம் |
1080 |
10. |
ஜம்ம & காஷ்மீர் |
3170 |
11. |
கர்நாடகா |
8003 |
12. |
கேரளா |
3 |
13. |
மத்திய பிரதேசம் |
657 |
14. |
மகாராஷ்டிரா |
3368 |
15. |
மணிப்பூர் |
8 |
16. |
மேகாலயா |
17 |
17. |
மிசோரம் |
1 |
18. |
நாகலாந்து |
2 |
19. |
ஒரிசா |
1765 |
20. |
பஞ்சாப் |
436 |
21. |
ராஜஸ்தான் |
14585 |
22. |
சிக்கிம் |
5 |
23. |
தமிழ்நாடு |
5259 |
24. |
திரிபுரா |
6 |
25. |
உத்திரப் பிரதேசம் |
1905 |
26. |
உத்தராஞ்சல் |
311 |
27. |
மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள் |
1462 |
28. |
அந்தமான் & நிக்கோபர் தீவுகள் |
0 |
29. |
சண்டிகர் |
0 |
30. |
தாத்ரா & ஹவேலி |
0 |
31. |
டெல்லி |
11 |
32. |
லட்சத்தீவு |
0 |
33. |
பாண்டிச்சேரி |
2 |
|
இந்தியா முழுவதும் |
57494 |
வ.எண் |
மாநில செம்மறியாடு மற்றும்உல்லன் நூல் வாரியங்கள் /கூட்டமைப்புகள் /நிறுவனங்கள் |
1. |
அப்கோ உல்லன் நூல், 3-5-770. நெசவாளர்கள் இல்லம், நாரயன் குடா, ஹைதராபாத் – 500 029 (ஆந்திரபிரதேசம்) |
2. |
குஜராத் செம்மறியாடு மற்றும் உல்லன் நூல் மேம்பாட்டு நிறுவனம் (லிமிடெட்)
“குஞ்ச்” நாரயணகுப்தா தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் எதிரில், எல்லிஸ் பிரிட்ஜ்,
அகமதாபாத் – 380 006 (குஜ்ராத்) |
3. |
ஹிமாச்சல் பிரதேச மாநில கூட்டுறவு உல்லன் நூல் கொள்முதல் மற்றும் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட்
பசுதான் இல்லன், பொய்லாயூகாஞ்ச, சிம்லா – 171 005 ( ஹிமாச்சல பிரதேசம்) |
4. |
ஜம்மு & காஷ்மீர் மநரில செம்மறியாடு மற்றும் செம்மறியாட்டு பொருட்கள் மேம்பாட்டு வாரியம், கர்த்தோலி, பிராமணா, ஜம்மு – 181 133 ( ஜம்மு & காஷ்மீர்) |
5. |
கர்நாடகா செம்மறியாடு மற்றும் செம்மறியாட்டு பொருட்கள் மேம்பாட்டு வாரியம், எண் – 58, 2வது மெயின் ரோடு, வயலிக்காவல், பெங்களூர் – 560 003 ( கர்நாடகா) |
6. |
மகாராஷ்டிரா மெந்தி வா கொல்லி விகாஸ் மகாமந்தல் லிமிடெட் மெந்தி பண்ணை. கோகலே நகர், புனே – 411 016 (மகாராஷ்டிரா) |
7. |
ராஜஸ்தான் மாநில கூட்டுறவு செம்மறியாடு & உல்லன் நூல் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், காந்தி நகர், டோங்க் சாலை, ஜெய்பூர் – இராஜஸ்தான் |
8. |
உத்திரப்பிரதேச கோழிப்பண்ணை & கால்நடை சிறப்பு நிறுவனம் கால்நடை வளர்ப்பு இயக்ககம், பாதுஷா பாஸ், கோராஸ் நாத் சாலை, லக்னோ - உத்திரபிரதேசம் |
இந்தியாவில் மண்டல வாரியாக உள்ள செம்மறியாட்டு இனங்களைப் பற்றிய தகவல்
வடமேற்கு வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதி |
தெற்கு பீடபூமி பகுதி |
கிழக்குப் பகுதி |
வடக்கு வெப்பமண்டலப் பகுதி |
சோக்லா |
டெக்கானி |
சோட்டாளாக்பூரி |
ஹாடி |
நாலி |
பெல்லாரி |
சகாபாடி |
ராம்பூர் |
மார்வாரி |
நெல்லூர் |
தஞ்சம் |
பஹார்வால் |
ஜெய்சால்மரி |
ஹாசன் |
திபெட்டேன் |
பூஞ்சி |
புங்கல் |
மேச்சேரி |
பொம்பாலா |
கூரஜ் |
மால்புரா |
கீழக்கரசல் |
|
காஷ்மீர் மெரினோ |
சோனாடி |
வேம்பூர் |
|
சங்கதாங்கி |
பட்டன்வாடி |
கோயமுத்தூர் |
|
|
முசாப்பூர்நகரி |
நீலகிரி |
|
|
ஜலானி |
ராமநாதபுர வெள்ளை |
|
|
ஹிசார்டேல் |
மெட்ராஸ் சிவப்பு
திருச்சி கருப்பு
கெங்கரி |
|
|
செம்மறியாடு வளர்ப்பிற்கான பயிற்சி நிறுவனங்கள்
- மத்திய செம்மறியாடு மற்றும் ஆட்டு ரோமம் ஆராய்ச்சி நிறுவனம், அவிக்கா நகர் (ராஜஸ்தான்)
- மத்திய செம்மறியாடு மற்றும் ஆட்டு ரோமம் ஆராய்ச்சி நிறுவனம், அவிக்கா நகர் (துணைநிலையம், பைக்கானர், ராஜஸ்தான்)
- செம்மறியாடு மற்றும் ஆட்டு ரோமம் ஆராய்ச்சி நிறுவனம், அவிக்கா நகர் (துணைநிலையம்) ஹார்சா, ஹிமாச்சல்பிரதேசம்)
- செம்மறியாட்டு மற்றும் ஆட்டுரோமம் பற்றிய பயிற்சி நிறுவனம் – குறிப்பிட்ட மாநிலங்களில் கால்நடை பராமரிப்புத் துறையால் விரிவுபடுத்தப்பட்டது. செம்மறியாடு வளர்ப்பிற்கு ஆகும் செலவு ( 20 பெண் ஆடு + 1 ஆண் ஆடு)
அ) இறைச்சி மற்றும் ஆட்டு உரோமத்திற்கான செம்மறியாடு மேம்பாட்டிற்கு ஆகும் செலவு
i.
|
20 பெண் ஆடுகளுக்கு ஆகும் செலவு @ ரூ.1200/- |
ரூ. 24,000 |
ii. |
1 ஆண் ஆடுகளுக்கு ஆகும் செலவு @ ரூ.1600/- |
ரூ.1,600 |
iii. |
கூடாரம், கலன்கள் மற்றும்இதரச் செலவுகள் |
ரூ.3,000 |
iv. |
மொத்தச் செலவு |
ரூ.28,600 |
v. |
மொத்தம் ஆகும் செலவில் 15% அளவு வரம்பு |
ரூ.4,300 |
vi. |
மொத்த லோன் |
ரூ.24,300 |
ஆ. பொருளாதார தொழில்நுட்ப பண்பளவுகள்
கால்நடை பராமரிப்புக்கு ஆகும் செலவு – வளர்ந்த ஆடு – ரூ.10, குட்டி – ரூ.5
- ஒரு வருட பெண் ஆடு மற்றும் ஆண் ஆட்டிற்கு இப்பொழுது இருக்கும் விலை ரூ.1200 மற்றும் ரூ. 1,600
- செம்மறியாட்டுக் குட்டி வளர 12 மாதம் ஆகும். செம்மறியாட்டு குட்டி சதவிகிதம் 75 மற்றும் இன விகிதம் 50:50
- செம்மறியாட்டுக் குட்டிகள் மற்றும் முதிர் ஆடுகளின் இறப்பு வீதம் 10% மற்றும் 5% ஆகும்.
- பெண் ஆட்டுக் குட்டிகள் கூடாரத்தில் வைக்கப்படும் 8-9 வயதுடைய ஆண் ஆடுகள் விற்பனை செய்யப்படும்.
- பெண் ஆடுகளின் தரப்பகுப்பு 20 சதவீதமாகவும், மூன்றாவது வருடத்திலிருந்து அதற்கு அதிகமாகவும் தரப்பகுப்பு செய்யப்படுகிறது.
- ஒரு வளர்ந்த ஆட்டிற்கு மேய்ச்சல் செலவு ஒரு வருடத்திற்கு 4 ரூபாயாகும்.
- கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஆட்டிற்கு 30 நாட்களுக்கான அடர் தீவன செலவு ( ஒரு ஆட்டிற்கு 250 கிராம்) ஒரு கிலோவிற்கு 5 ரூபாயகும்.
- ஒரு வருடத்திற்கு காப்பீடு 4 % ஒரு வளர்ந்த ஆட்டிற்கு, ஒரு வருடத்திற்கான மருத்துவச் செலவு ரூ. 10 மற்றும் 5 ரூபாயாகும்.
- ஒரு வருடத்தில் 2 முறை உரோமம் எடுக்கப்பட்டுள்ளது. வளர்ந்த ஆடானது ஒரு வருடத்திற்கு 1.2 கிலோ என்ற அளவில் உரோமத்தையும், இளம் ஆடு ஒரு வருடத்திற்கு 600 கிராம் என்ற அளவில் உரோமத்தை தருகின்றன.
- ஆண்குட்டியின் விலை ரூ.800, வளர்ந்த பெண் ஆடு ஒன்றின் விலை ரூ.1000, வளர்ந்த ஆடு ரூ.1200
- ஒரு வளர்ந்த ஆட்டிற்கு ஒரு வருடத்திற்கு கொட்டிலில் அடைக்க ஆகும் செலவு ரூ.8 வருடத்திற்கு 2 முறை இந்த மாதிரி கொட்டிலில் அடைக்கப்படும்.
- வளர்ப்பிற்கு ஆகும் செலவு ஆரம்ப இருப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.
செம்மறியாடு மேம்பாட்டு திட்டத்தில் கொட்டில் திட்ட ஏற்பாட்டிற்கான அட்டவணை:
மேச்சேரி இனம் – தமிழ்நாடு மாநிலம்
|
|
ஆண் ஆடு |
பெண் ஆடு |
இளம் ஆடு வளர்ப்பு (%) : 75, வளர்ந்த ஆடு இறப்பு விகிதம் (%) :5, இளம் ஆடு இறப்பு விகிதம் (%) :10
மூன்று வருடத்திலிருந்து இளம் ஆடு தரப்பகுப்பு 20 என்ற அளவில் செய்யலாம்
புதிதாக வாங்கியதிலிருந்து ஒவ்வொரு 2 வருடத்திற்கு பிறகும் வயதான ஆண் ஆடுகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
இளம் ஆடுகள் விற்றல் : அனைத்து இளம் பெண் ஆடுகளையும் கொட்டிலிலேயே வைத்துக் கொள்ளலாம். 8-9 மாதமுடைய இளம் ஆண் ஆடுகள் விற்கப்படும்.
இளம் ஆடுகளுக்கான இடைவெளி : ஒரு வருடம்
R – ஆண் ஆடு E- பெண் ஆடு ML – இளம் ஆண் ஆடு FL – இளம் பெண் ஆடு
பண ஓட்ட ஆய்வு :
விபரங்கள் |
வருடங்கள் |
I |
II |
IIII |
IV |
V |
VI |
I. செலவுகள் |
|
|
|
|
|
|
a). முதலீட்டுச் செலவு |
28600 |
|
|
|
|
|
b)ஆண் ஆடு வாங்குதல் |
- |
- |
1600 |
- |
1600 |
- |
c) தீவனச் செலவு |
|
|
|
|
|
|
(i) மேய்ச்சலுக்கான தீவனம் |
84 |
80 |
104 |
108 |
118 |
120 |
(ii)அடர் தீவனம் |
562 |
675 |
750 |
712 |
787 |
825 |
d) காப்பீட்டு செலவு |
1024 |
928 |
1024 |
1022 |
1120 |
1168 |
e) மருத்துவ செவு |
265 |
250 |
250 |
275 |
805 |
310 |
f) ரோமம் எடுப்பதற்கான செலவு |
50 |
64 |
76 |
85 |
90 |
95 |
மொத்த செலவு |
30585 |
1920 |
3804 |
2552 |
4048 |
2518 |
II. ஆதாயங்கள் |
|
|
|
|
|
|
a). உரோமம் விற்றல் |
1512 |
1164 |
1668 |
1716 |
1716 |
1740 |
b). இளம் ஆண் ஆடுகளை விற்றல் |
- |
4800 |
4800 |
6300 |
6400 |
8000 |
c). வயதான ஆடுகளை விற்றல் |
- |
- |
5200 |
5020 |
8200 |
8200 |
d).கொட்டிலில் அடைத்து வைக்க ஆகும் செலவு |
1008 |
960 |
1247 |
1295 |
1392 |
1440 |
e). இறுதி இருப்பு மதிப்பு |
|
|
|
|
|
|
மொத்த ஆதாயங்கள் |
2520 |
6924 |
12915 |
13145 |
17708 |
69300 |
நிகர ஆதாயங்கள் |
28065 |
5004 |
9111 |
10893 |
13660 |
66862 |
வரவு செலவு விகிதம், நிகர செலவு விகிதம், ஐ.ஆா்.ஆர் |
|
|
|
|
|
|
என்.பி.வி.15% |
|
|
|
|
|
|
செலவுகள் |
34937 |
|
|
|
|
|
ஆதாயங்கள் |
62233 |
|
|
|
|
|
என்.பி.டபிள்யூ |
27296 |
|
|
|
|
|
ஐ.ஆர்.ஆர் (%) |
40 |
|
|
|
|
|
வளரும் இளம் ஆடுகளுக்கான ஊட்டச்சத்து தேவை :
உடல் எடை (கிலோ) |
லாப விகிதம் (கிராம்/நாள்) |
உலர் பொருள் (கிராம்) |
டி.சி.பி (கிராம்) |
எம்.இ (கி.கலோரி) |
கால்சியம் (கிராம்) |
பாஸ்பரஸ் (கிராம்) |
10 |
50 |
400 |
35 |
0.86 |
2 |
1.5 |
|
100 |
450 |
45 |
1.00 |
2.5 |
2.5 |
|
150 |
500 |
55 |
1.15 |
3.0 |
2.0 |
15 |
50 |
500 |
45 |
1.08 |
2.8 |
2.0 |
|
100 |
600 |
55 |
1.30 |
3.5 |
2.5 |
|
150 |
700 |
65 |
1.62 |
4.5 |
3 |
20 |
50 |
700 |
50 |
1.44 |
3.5 |
2.5 |
|
100 |
800 |
70 |
2.01 |
4.5 |
3 |
|
150 |
1000 |
80 |
2.3 |
5.5 |
3.5 |
25 |
50 |
800 |
65 |
1.80 |
4.5 |
3.0 |
|
100 |
1200 |
85 |
2.52 |
5.0 |
3.5 |
|
150 |
1400 |
100 |
2.88 |
6.0 |
4.0 |
செம்மறியாடு வளர்ப்புக்கு வங்கிகளிலிருந்து நிதி உதவி / நபார்டு
வேளாண் கடன் வழங்குவதில் நபார்டு வங்கி தான் முதன்மையான வங்கியாக இருக்கிறது. இது மற்ற வங்கிகளுக்கு வேளாண் மற்றும்ஊரக மேம்பாட்டிற்கு பணத்தை அளிக்கும் நிறுவனமாக செயல்படுகிறது. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப சேவை துறை மற்றும் ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் உள்ள தொழில்நுட்ப மையங்களுடன் இணைந்து வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
செம்மறியாடு வளர்ப்பிற்கு நபார்டு வங்கியிலிருந்து திரும்ப நிதி பெறும் வசதியின் மூலம் கடன் பெற முடியும். வங்கியிலிருந்து கடன் பெற, உழவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள வங்கிகளின் கிளைகள், கூட்டுறவு வங்கி (அ) மண்டல ஊரக வங்கிகளின் கிளைகள் மூலமாக, விண்ணப்பம் பெற்று கடன் வசதி கோரலாம். வங்கியின் மேலாளர் ( தொழில்நுட்ப அலுவலர்) கடன் வசதி பெறுவதற்கு எல்லா வீதத்திலும் உழவர்களுக்கு உதவி செய்வார்கள்.
செம்மறியாடு மேம்பாட்டு திட்டங்களுக்கான, விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். பயனாளிகள் நபார்டு வங்கியின் சேவைகளை பயன்படுத்தி செம்மறியாடு இனங்களை வாங்குதல், கொட்டில் அமைத்தல், அதற்குத் தேவையான கலன்கள் வாங்குதல் மற்றும் பல செய்யலாம். இந்த கடன் வசதிக்கு நிலத்தின் விலை சேர்க்கப்படாது.
ஆதாரம்:http ://www.nabard.org/
|